காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்


காவிரி மேலாண்மை ஆணையத்தை  கண்டித்து ஆர்ப்பாட்டம்
x

நாகையில் காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகையில் காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் ஆகியவை சார்பில் நாகை அவுரித்திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் சேரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் தனபாலன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க துணைத்தலைவர் பக்கிரிசாமி, அமைப்பாளர்கள் பிரகாஷ், ராஜேந்திரன், ராமசாமி, வினோத், கார்த்திகேயன் மற்றும் கண்ணன், தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோஷங்கள்

மேகதாதுவில் அணை கட்ட திட்ட வரைவு அறிக்கை வழங்கி மறைமுகமாக அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசை கண்டிப்பது. கர்நாடக அரசிற்கு துணைபோகும் காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story