காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது..!


காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது..!
x
தினத்தந்தி 29 Aug 2023 9:27 AM GMT (Updated: 29 Aug 2023 10:10 AM GMT)

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு எதிராகவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு எதிராகவும், தமிழக அரசு தொடர்ந்த அவசர மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தமிழக அரசு தொடர்ந்துள்ள அவசர மனு மீது 3 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தது. மேலும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையையும் கோர்ட்டு கேட்டுள்ளது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவசர மனு மீது முடிவெடுக்கப்பட உள்ளது.

காவிரியில் இருந்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்த உள்ளனர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக அளிக்கப்படும். காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் மூலமாக வாடும் பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு டெல்டா விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.


Next Story