திருவாரூரில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம்


திருவாரூரில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம்
x

புதிய எண்ணெய் கிணறு தோண்ட அரசு அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி திருவாரூரில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

புதிய எண்ணெய் கிணறு தோண்ட அரசு அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி திருவாரூரில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய எண்ணெய் கிணறு

காவிரி படுகையில் புதிய எண்ணெய் எரிவாயு கிணறுகள் தோண்டவும், பழைய செயல்படாத கிணறுகளை புதுப்பிக்கவும் தமிழக அரசு அனுமதிக்க கூடாது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இன்றி இயங்கும் எரிவாயு கிணறுகளை ஆய்வு செய்து, அவற்றை மூட வேண்டும்.

பணி இழக்க கூடிய பணியாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரவேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் புதிதாக எண்ணெய் எரிவாயு எடுத்து செல்லும் குழாய்களை பதிக்கக்கூடாது.

ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் பெரியகுடியில் செயல்படாத எரிவாயு கிணற்றை வல்லுனர் குழுவை அமைத்து அதன் மேற்பார்வையில் மூட வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சூழலை பாதிக்காத, வேளாண் உற்பத்தி பொருட்களை மதிப்பு கூட்டும் தொழில்களை தொடங்கி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு காவரி உரிமை மீட்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்திற்குகாவரி உரிமை மீட்புக்குழுவின் திருவாரூர் நகர தலைவர் கலைச்செல்வம் தலைமை தாங்கினார். மன்னார்குடி நகர தலைவர் ராசசேகரன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கலந்து கொண்டார்.

இதில் மாவட்ட தலைவர் பாரதி செல்வன், விவசாய சங்க நிர்வாகி மணிமொழியன், திருவாரூர் நகர செயலாளர் செந்தில், மன்னார்குடி நகர செயலாளர் அரிசுரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story