சிவப்பு நிறத்தில் மின்னும் காவிரி ஆற்றுப்பாலம்
கபிஸ்தலம் அருகே மேட்டுத்தெருவில் சிவப்பு நிறத்தில் மின்னிய காவிரிப்பாலத்தை ஏராளமான மக்கள் பார்த்து சென்றனர்.
தஞ்சாவூர்
கபிஸ்தலம்;
கபிஸ்தலம் அருகே மேட்டுத்தெருவில் சிவப்பு நிறத்தில் மின்னிய காவிரிப்பாலத்தை ஏராளமான மக்கள் பார்த்து சென்றனர்.
காவிரி
தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அருகே மேட்டு தெருவில் அமைந்துள்ள காவிரி அரசலாறு தலைப்பில் ரூ. 40 கோடியில் கட்டப்பட்டுள்ள, புதிய நீர் ஒழுங்கி பாலத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்தநிலையில், காவிரியில் இருந்து வரும் நீர் இங்கு தான் அரசலாறாக பிரிந்து செல்கிறது.
சிவப்பு நிறத்தில்...
தற்போது அரசலாறு மற்றும் காவிரி ஆற்றின் பாலங்கள் முழுவதும், தினசரி மாலை நேரங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. காவிரி மற்றும் அரசலாறு பாலங்கள் காண்போர் கண்களை கவரும் வகையில், இரவு நேரத்தில் சிவப்பு நிறத்தில் மின்னுகிறது. இதை கபிஸ்தலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் பாா்த்து சென்றனர்.
Related Tags :
Next Story