காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க நிர்வாக குழு கூட்டம்


காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க நிர்வாக குழு கூட்டம்
x

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க நிர்வாக குழு கூட்டம் நடந்தது.

கரூர்

நன்செய் புகழூரில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் விசுவநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், சமூக ஆர்வலருமான முகிலன் கலந்து கொண்டு பேசினார்.

திருப்பூர் சாயப்பட்டறையில் இருந்து நொய்யல் ஆற்றில் வந்து காவிரியில் கலக்கும் சாயக்கழிவு நீரை சுத்திகரித்த பின்பே கதவணையில் தேக்க வேண்டும். ஈரோடு வெண்டிப்பாளையம் தடுப்பணையில் தேக்கப்பட்ட சாயப்பட்டறை கழிவுநீரை இன்று வரை சுத்திகரிக்க முடியவில்லை. அதற்கான தொழில்நுட்பமும் அரசிடம் இல்லை. எனவே காவிரியில் கலக்கும் சாயப்பட்டறை கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்ற உறுதிமொழியை வெளிப்படையாகவும், உறுதியாகவும் கொடுக்காத ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர்களை புறக்கணிக்க வேண்டும். ஆறுகளில் புதிய மணல் குவாரி அமைக்க கூடாது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story