கும்பகோணத்துக்கு காவிரி நீர் வந்தது
கும்பகோணத்துக்கு காவிரி நீர் வந்ததை தொடர்ந்து பொதுமக்கள் ஆற்றில் மலர் தூவி வரவேற்றனர்
தஞ்சாவூர்
கும்பகோணம்
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகளுக்காக கடந்த மாதம் 24-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததும் அங்கிருந்து கடந்த 27-ந் தேதி காவிரியில் அமைச்சர்கள் தண்ணீரை திறந்து விட்டனர்.காவிரியில் சீறிப்பாய்ந்து வந்த அந்த தண்ணீர் நேற்று முன்தினம் காலை கும்பகோணம் வந்தடைந்தது.
மலர்தூவி வரவேற்பு
காவிரியில் கரைபுரண்டு ஓடிய தண்ணீருக்கு கும்பகோணம் பகவத் படித்துறை பகுதியில் விஜயேந்திரர் மடத்தின் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பால், திரவியம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்கள் தூவப்பட்டன.இதில், திரளான பொதுமக்கள் பங்கேற்றனர். அப்போது அவர்கள் விவசாயம் செழிக்கவும், தொழில்வளம் பெருகவும் காவிரி அன்னையை வணங்கினர்.
Related Tags :
Next Story