மயிலாடுதுறை கடைமடை பகுதிக்கு வந்து சேர்ந்த காவிரி நீர் - விவசாயிகள் மகிழ்ச்சி


மயிலாடுதுறை கடைமடை பகுதிக்கு வந்து சேர்ந்த காவிரி நீர் - விவசாயிகள் மகிழ்ச்சி
x

இன்னும் ஓரிரு தினங்களில், விவசாய பாசனத்திற்காக தண்ணீர் பகிர்ந்து அளிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை,

டெல்டா மாவட்டங்களின் பாசன தேவைகளுக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த அண்டு மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி நீர், பல்லாயிரம் மைல்கள் கடந்து காவிரியின் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தடைந்தது. திருவாலங்காடு முதல் கதவணையான விக்ரமன் ஆற்றுக்கு நீர் வந்தடைந்ததை அடுத்து, பாசன வசதிக்காக 782 கனஅடி தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து வைத்தனர்.

மேட்டூர் அணையின் விதிகளின் படி, காவிரி ஆறு கடலுடன் கலக்கும் பூம்புகாருக்கு முன்னதாக, மேலையூர் கடைமடை கதவணை பகுதிக்கு காவிரி நீர் சென்று சேர்ந்த பின்னர், மற்ற கிளை ஆறுகள், வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படும். அதன்படி இன்னும் ஓரிரு தினங்களில், விவசாய பாசனத்திற்காக தண்ணீர் பகிர்ந்து அளிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் டெல்டா பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




Next Story