தஞ்சை வந்தடைந்த காவிரி நீர்


தஞ்சை வந்தடைந்த காவிரி நீர்
x

தஞ்சை வந்தடைந்த காவிரி நீர் குப்பை கழிவுகளுடன் சென்றது. இதனை பொதுமக்கள் வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சை வந்தடைந்த காவிரி நீர் குப்பை கழிவுகளுடன் சென்றது. இதனை பொதுமக்கள் வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தனர்.

காவிரி நீர் வந்தது

டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக நேற்று முன்தினம் கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் திறக்கப்பட்டது. முதலில் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆறுகளில் தலா 500 கன அடி திறக்கப்பட்டு படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டது. கல்லணைக் கால்வாயில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால், முதலில் 100 கன அடி திறக்கப்பட்டது. பின்னர் அது 500 கன அடியாக உயர்த்தப்பட்டது. கல்லணையில் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் தஞ்சை நகரம் வழியாக செல்லும் கல்லணைக் கால்வாயில் நேற்று காலை வந்தது.

குப்பை கழிவுகளாக சென்றது

அப்போது ஆற்றில் நுங்கும், நுரையுமாகவும் காவிரி நீர் பெருக்கெடுத்து வந்தது. இதனை பொதுமக்கள் பலரும் ஆற்று பாலங்களில் நின்று வேடிக்கை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் ஆற்றில் கழிவுகளும், குப்பைகளும் அதிகளவில் சென்றதால் முதல் 2 நாட்கள் பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்க வேண்டாம் என நீர்வளத்துறையினர் கேட்டுக் கொண்டனர்.


Related Tags :
Next Story