காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு கூட்டம்


காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு கூட்டம்
x

காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம்

காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் அனிதா குப்புசாமி தலைமையில் நடைபெற்றது.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சையுப்தீன், தண்டாயுதபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஒன்றியம் முழுவதிலும் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும்.

பழுதடைந்த ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டவும், மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டுவர விழிப்புணர்வு ஏற்படுத்த கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் முனியம்மாள், ஒன்றிய கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story