சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உலக ராணி விசாரணை அதிகாரியாக நியமனம்


சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உலக ராணி விசாரணை அதிகாரியாக நியமனம்
x

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உலக ராணி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

திருநெல்வேலி

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உலக ராணி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

பற்களை பிடுங்கிய விவகாரம்

நெல்லை மாவட்டம் அம்பை, கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி விவகாரம் தொடர்பாக அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் உளவு பிரிவு போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இதுதொடர்பாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், பல்வீர்சிங் மற்றும் சிலர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விசாரணை அதிகாரி நியமனம்

இதற்கிடையே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு நெல்லை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் உலக ராணி விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தால் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் உலகராணி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கு ஆவணங்களை சேகரித்து தனது விசாரணையை தொடங்குவார் என்று தெரிகிறது.


Next Story