தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை நிராகரிப்பு


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை நிராகரிப்பு
x

சிபிஐ தரப்பில் மீண்டும் விசாரணை நடத்தி 6 மாதத்திற்குள் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மதுரை,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கிய சிபிஐ, காவல் ஆய்வாளர் திருமலை என்பவர் மீது மட்டும் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது.

இதனிடையே, சிபிஐ-யின் நடவடிக்கை சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது என மதுரையில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அர்ச்சுனன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சிபிஐ-யின் இறுதி அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும், கொலைகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், வருவாய் அலுவலர், காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில், ஒரு இன்ஸ்பெக்டர் மட்டுமே குற்றவாளி என்ற சிபிஐ-யின் குற்றப்பத்திரிகையை நிராகரித்தது. மீண்டும் இந்த வழக்கில் புலன் விசாரணை செய்து, ஆறு மாதத்திற்குள் புதிய இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Next Story