சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தினர்காதில் பூ சுற்றி போராட்டம்
சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தினர் காதில் பூ சுற்றி போராட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்ட புதிய ஓய்வூதிய சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் தி.மு.க. தேர்தல் அறிக்கை வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி காதில் பூ சுற்றி நூதன போராட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.பி.எஸ். ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் கலந்து கொண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதபோது தமிழக அரசு தேர்தல் அறிக்கையை 100 சதவீதம் நிறைவேற்றி உள்ளதாக கூறுவது கண்டிக்கத்தக்கது என்றும், பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளதால் காதில் பூ சுற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பேசினார். நிகழ்ச்சியில், சி.பி.எஸ். ஒழிப்பு இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சீனி முகம்மது, சிவக்குமார், கோவிந்தன், குமரன், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.