குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தம்
குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.
இளையான்குடி,
இளையான்குடி ஒன்றியத்தில் இளையான்குடி போலீஸ் நிலையத்தின் மூலம் அனைத்து கிராமங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியை செயல்படுத்த வேண்டுமென போலீசார் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதன் மூலம் குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்றங்களை எளிதில் அடையாளம் காணவும் போலீசாருக்கு உதவியாக இருக்கும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் பெருமச்சேரி கிராமத்தில் ராஜ் சமுதாய உதவி குழு என்ற அமைப்பை இளைஞர்கள் ஏற்படுத்தி கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியை மேற்கொண்டனர். முதல் கட்டமாக பெருமச்சேரி கிராமத்தில் பரமக்குடி-நயினார் கோவில் செல்லும் சாலையில் பஸ் நிறுத்தத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பெருமச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி முருகன் முன்னிலை வகித்தார். இதில் இளையான்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி கண்காணிப்பு கேமரா செயல்பாட்டை தொடங்கி வைத்தார்.