குறுவட்ட வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்


குறுவட்ட வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
x

விருதுநகர் மாவட்டத்தில் குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர்


விருதுநகர் மாவட்டத்தில் குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

பணியிட மாற்றம்

அதன் விவரம் வருமாறு:- காரியாபட்டி சரவணன் திருச்சுழி குறுவட்ட ஆய்வாளராகவும், அருப்புக்கோட்டை கோட்ட அலுவலக வருவாய் ஆய்வாளர் சடைக்கிழவன் வீரசோழன் குறுவட்ட ஆய்வாளராகவும், வத்திராயிருப்பு தாலுகா அலுவலக வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் ஸ்ரீவில்லிபுத்தூர் குறுவட்ட ஆய்வாளராகவும், சிவகாசி வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் வெம்பக்கோட்டை ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கலெக்டர் அலுவலக வருவாய் பிரிவு ஆய்வாளர் சுகுமார் விருதுநகர் ஒண்டிப்புலி நாயக்கனூர் குறுவட்ட ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் பெற்றுள்ளனர்.

குறுவட்ட ஆய்வாளர்கள்

காரியாபட்டி தாலுகா கல்குறிச்சி புவனேஸ்வரி முடுக்கன் குளத்திற்கும், முடுக்கன் குளம் சியாமளா கல்குறிச்சிக்கும், சாத்தூர் நென்மேனி சுப்புராஜ் வத்திராயிருப்பிற்கும், வத்திராயிருப்பு குமரேசன் நென்மேனிக்கும் பணியிட மாற்றம் பெற்றுள்ளனர்.

விருதுநகர் ஒண்டிப்புலி நாயக்கனூர் குறுவட்ட ஆய்வாளர் சுரேஷ் பாபு, கலெக்டர் அலுவலக வருவாய் ஆய்வாளராகவும், ஸ்ரீவில்லிபுத்தூர் குறுவட்ட ஆய்வாளர் ஆனந்த கிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலக பறக்கும் படை ஆய்வாளராகவும், அந்த பணியில் இருந்த செல்லத்துரை அருப்புக்கோட்டை தாலுகா அலுவலக வருவாய் ஆய்வாளராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வத்திராயிருப்பு

வெம்பக்கோட்டை குறுவட்ட ஆய்வாளர் ராமலட்சுமி சிவகாசி ஆர்.டி.ஓ. அலுவலக வருவாய் ஆய்வாளராகவும், சிவகாசி தாலுகா அலுவலக ஆய்வாளர் ராஜமல்லிகா கலெக்டர் அலுவலக வருவாய் ஆய்வாளராகவும், அந்த பணியிடத்திலிருந் த கலைச்செல்வி கலெக்டர் அலுவலக பி.1 வருவாய் ஆய்வாளராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த பணியிடத்தில் பணிபுரிந்த மணியமுதா வத்திராயிருப்பு தாலுகா அலுவலக வருவாய் ஆய்வாளராகவும், சாத்தூர் தாலுகா அலுவலக வருவாய் ஆய்வாளர் செல்வகுமார் விருதுநகர் தாட்கோ அலுவலகத்திற்கும், திருச்சுழி வருவாய் ஆய்வாளர் ஜெகதீஸ்வரி பிற்படுத்தப்பட்டோர்நல வருவாய் ஆய்வாளராகவும் ,அந்த பணியிடத்திலிருந்த முருகேஸ்வரி காரியாபட்டி தாலுகா அலுவலக வருவாய் ஆய்வாளராகவும், கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை பிரிவு வருவாய் ஆய்வாளர் பரமசிவம் சிவகாசி தீப்பெட்டி பட்டாசு தாசில்தார் அலுவலக வருவாய் ஆய்வாளராகவும், அந்த பணியிடத்தல் இருந்த ராஜ்குமார் கலெக்டர் அலுவலக வருவாய் ஆய்வாளராக சி.1 பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story