குறுவட்ட விளையாட்டு போட்டி


குறுவட்ட விளையாட்டு போட்டி
x
தினத்தந்தி 20 Aug 2023 12:15 AM IST (Updated: 20 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குறுவட்ட விளையாட்டு போட்டியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்

செஞ்சி:

பள்ளிகல்வித்துறை சார்பில் செஞ்சி குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி செஞ்சி அல்ஹிலால் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழுதலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், அல் ஹிலால் மெட்ரிக் பள்ளி தாளாளர் சையத் ரிஸ்வான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செஞ்சி குறு வட்டமைய செயலாளர் ஜிவேந்திரன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து பேசினார். இதில் செஞ்சி, மேல்மலையனூர், வல்லம் ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட 70 பள்ளிகளை சேர்ந்த 600 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு கை எரிபந்து, எரிபந்து, இறகுப்பந்து ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடினர்.

இதில் வல்லம் ஒன்றியக்குழு தலைவர் அமுதா ரவிக்குமார், ஒன்றிய செயலாளர் துரை, இளம்வழுதி, நகர செயலாளர் கார்த்திக், பேருராட்சி கவுன்சிலர் ஜான் பாஷா, பள்ளி முதல்வர் அப்ரோஸ்கான், தி.மு.க. நிர்வாகி ஜே.எஸ்.சர்தார், உடற்கல்வி ஆசிரியர்கள் பழனி, செல்வி, சையத்அமீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செஞ்சி குறுவட்ட மைய துணை செயலாளர் ஆனந்தராஜ் நன்றி கூறினார்.


Next Story