அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு


அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு
x

ஆம்பூர், மாதனூரில் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

ஆம்பூர் நகர தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஆம்பூர் பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு ஆம்பூர் நகர செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆம்பூர் நகர மன்ற தலைவர் பி.ஏஜாஸ் அகமது மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர்.

மாதனூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு, மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதேபோல் மாதனூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கைலாசகிரி பகுதியில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாதனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


Next Story