சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்


சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்
x

சர்வதேச யோகா தினம் கொண்டாட்டப்பட்டது.

கரூர்

மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி, பொன்காளியம்மன் கல்வியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பின் சார்பாக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் ஏனோக் ஜெபசிங் பெட்போர்டு முன்னிலை வகித்தார். பொன்காளியம்மன் கல்வியில் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலரும், கணினி அறிவியல் துறை பேராசிரியருமான தனலட்சுமி வரவேற்று பேசினார். அரசு கல்வி நிறுவனங்களின் தலைவரும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினருமாகிய முனைவர் நடேசன் தலைமை தாங்கி மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார். அரசு கல்வி நிறுவனங்களின் செயலாளர் பொறியாளர் கண்ணன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக கரூர் மாவட்ட பிரம்மா குமாரிகளின் இயக்குனர் சகோதரி ராஜயோகினி சாரதா கலந்துகொண்டு மாணவிகளுக்கு யோகா கலையை பயில்வதன் பலன்களையும், அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

மேலும் சகோதரி பிரியங்கா மாணவிகளுக்கு எளிய உடற்பயிற்சிகளையும், யோகாசனத்தையும் செய்து காட்டி மாணவிகளையும் செய்ய வைத்தார். அதைத் தொடர்ந்து யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவிகள், பேராசிரியர்கள், ஆசிரியரில்லா பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

முடிவில் கணிதவியல் துறை பேராசிரியர் பாலா நன்றி கூறினார்.


Next Story