உலக தாய்ப்பால் வார விழா


உலக தாய்ப்பால் வார விழா
x
தினத்தந்தி 2 Aug 2023 9:00 PM GMT (Updated: 2 Aug 2023 9:01 PM GMT)

ஸ்ரீ மதுரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது.

நீலகிரி

கூடலூர்

உலக தாய்ப்பால் வாரவிழாவை முன்னிட்டு கூடலூர் அருகே ஸ்ரீமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு தாய்ப்பால் முக்கியத்துவம் மற்றும் கர்ப்பகால மனநல ஆலோசனை முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். அஜித், திலகராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மணிகண்டன் பேசும்போது, குழந்தை பிறந்தது முதல் 6 மாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளின் ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதுபோல் தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கிறது. 6 மாதத்திற்கு பிறகு கிழங்கு, பருப்பு, உள்ளிட்டவைகளோடு அரிசி சாப்பாடு சேர்த்து கொடுக்கலாம் என்றார். கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் கலந்துகொண்டு பேசினார். செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தை வளர்ச்சி, பாலூட்டும் முறைகள், அரசு திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். தொடர்ந்து அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. இதில் கள அலுவலர்கள் கிஷோர், ஜான்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story