உலக தாய்ப்பால் வார விழா
பாடந்தொரையில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது.
நீலகிரி
கூடலூர்,
கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்தொரை அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் மத்திய, மாநில அரசுகள் கொடுக்கக்கூடிய பல்வேறு உணவு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து கர்ப்ப காலத்தில் சத்தான உணவு வகைகளை எடுத்துக்கொள்வது குறித்து விளக்கப்பட்டது. பின்னர் பாலூட்டும் தாய்மார்கள் தனது குழந்தையை எப்படி பாதுகாக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் வி.கே.அனிபா, சாஹினா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story