உலக தாய்ப்பால் வார விழா


உலக தாய்ப்பால் வார விழா
x

உலக தாய்ப்பால் வார விழா

மதுரை

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இந்திய குழந்தைகள் நல மருத்துவ குழுமத்தின் மதுரை கிளை மற்றும் குழந்தைகள் நலத்துறையின் சார்பாக உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வாரம் முழுவதும் தாய்ப்பால் ஊட்டுதலின் அவசியம் மற்றும் நன்மைகள் பற்றிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கருத்தரங்கத்தில் நேற்று நடந்தது. அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல் தலைமை தாங்கினார். இந்திய குழந்தைகள் நல மருத்துவ குழும தலைவர் ராஜராஜேஷ்வரன் வரவேற்றார். இந்திய குழந்தைகள் நலத்துறை தலைவர் பாலசங்கர், இந்த ஆண்டின் கருப்பொருள் பற்றி விரிவுரை ஆற்றினார். இந்திய குழந்தைகள் நல மருத்துவ குழும செயலாளர் கார்த்திக் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்து பேசினார். 6 மாதம் தாய்ப்பால் மட்டுமே அளித்து ஆரோக்கியமாக வளர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் மருத்துவம் மற்றும் செவிலியர் மாணவர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் கண்காணிப்பாளர் வீரராகவன், நிலைய மருத்துவ அதிகாரிகள் ரவீந்திரன், ஸ்ரீலதா, பேராசிரியர்கள் நந்தினி குப்புசாமி, பாலசுப்பிரமணியன், சிவகுமரன், உதவி பேராசிரியர்கள், குழந்தைகள் நலத்துறையின் முதுநிலை மாணவர்கள், செவிலியர் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story