உலக மருந்தாளுனர்கள் தினம் கொண்டாட்டம்
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உலக மருந்தாளுனர்கள் தினம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு அரசு மருந்தாளுனர்கள் சங்கம் சார்பில் உலக மருந்தாளுனர்கள் தினம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுதாகர் முன்னிலை வைத்தார். சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் இணை இயக்குனர் டாக்டர் மாரிமுத்து, சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில் கலந்துகொண்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மருந்தாளுனர்கள், மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருந்தாளுனர்களுக்கு பாராட்டி பரிசு வாழங்கி பேசினார்கள்.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவ அலுவலர் டாக்டர் கே.டி.சிவகுமார், டாக்டர்கள் பிரபாகரன், வேல்முருகன், வட்டார மருத்துவ அலுவலர்கள் பசுபதி, தீபா, மருந்தாளுனர்கள் சங்க மாநில செயலாளர் வேந்தன், அரசு டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் பொருளாளர் முத்து குமரன் நன்றி கூறினார்.