அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தென்காசி

சங்கரன்கோவில்:

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி சங்கரன்கோவில் பழைய பஸ்நிலையம் அருகில் முன்னாள் அமைச்சரும், மகளிர் அணி துணைச் செயலாளருமான வி.எம்.ராஜலட்சுமி தலைமையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் பொது குழு உறுப்பினர் காளிராஜ், ஒன்றிய செயலாளர் ரமேஷ், நகர செயலாளர் ஆறுமுகம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ரவிச்சந்திரன், தலைமை கழக பேச்சாளர் கணபதி, ராமசுப்பிரமணியன், நகர்மன்ற உறுப்பினர் எஸ்.டி சங்கரசுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story