அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்


அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்
x

ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையொட்டி திருச்சியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

திருச்சி

ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையொட்டி திருச்சியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

வழக்கு தள்ளுபடி

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியில் ஒற்றை தலைமை கொண்டு வருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்தும், அதன் பின்னர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் அனைத்து மனுக்களையும் ஐகோர்ட்டு நீதிபதிகள் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளனர்.

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

இதைத்தொடர்ந்து திருச்சியில் அ.தி.மு.க.மாணவரணி மாவட்ட செயலாளரும், ஆவின் சேர்மன் கார்த்திகேயன் அறிவுறுத்தலின் பேரில் 14-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் அரவிந்தன் தலைமையில் திருச்சி, தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் நிர்வாகிகள் இலியாஸ், சகாபுதீன், மலையப்பன், தென்னூர் அப்பாஸ், ராமலிங்கம், வக்கீல் சுரேஷ், அப்பாக்குட்டி, காசிபாளையம் சுரேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story