ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

சிவகங்கை

திருப்பத்தூர்,

எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஜூலை மாதம் 11-ந் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையொட்டி திருப்பத்தூரில் காந்தி சிலை அருகே ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் புதுத்தெரு முருகேசன் தலைமையில் நேற்று பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும் பஸ் நிலையம், மதுரை ரோடு, அண்ணா சிலை, அஞ்சலக வீதி, பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் முன்னாள் ஒன்றிய செயலாளர் காந்தி, முன்னாள் ஊராட்சி தலைவர் நாகராஜன், ராமராஜூ, சிவா, தேவேந்திரன், தெக்கூர் ராமச்சந்திரன், உதயகுமார், கணேசன், கல்யாணசுந்தரம், ராமகிருஷ்ணன், ஆனந்தராஜ், மோகன், சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story