கடைக்கு சென்றவரை வழிமறித்து செல்போன், பணம் பறிப்பு


கடைக்கு சென்றவரை வழிமறித்து செல்போன், பணம் பறிப்பு
x

கடைக்கு சென்றவரை வழிமறித்து செல்போன், பணம் பறிக்கப்பட்டது

மதுரை


மதுரை பைக்காரா நாயக்கமார் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 50). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் குமாரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர் அவரை தாக்கி அவரிடமிருந்த செல்போன் மற்றும் 5 ஆயிரம் ரூபாயை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்து அவர் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story