பள்ளி மாணவரிடம் செல்போன் பறிப்பு; 2 பேர் கைது


பள்ளி மாணவரிடம் செல்போன் பறிப்பு; 2 பேர் கைது
x

பள்ளி மாணவரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை செந்தில்நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பள்ளி மாணவர் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை சுபம்மகால் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர், அந்த மாணவரிடம் அரிவாளை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து அவர் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பாளையங்கோட்டை தாலுகா போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக 2 வாலிபர்கள் அந்த பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் சீவலப்பேரியை சேர்ந்த பூல்பாண்டி மகன் கருப்பசாமி (30), கீழநத்தம் கீழுரை சேர்ந்த காந்தி மகன் சகாயராஜ் (25) என்பதும், பள்ளி மாணவரிடம் செல்போனை பறித்து சென்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.


Next Story