டான்ஸ் மாஸ்டரிடம் செல்போன், பணம் திருட்டு


டான்ஸ் மாஸ்டரிடம் செல்போன், பணம் திருட்டு
x
தினத்தந்தி 13 Aug 2023 12:15 AM IST (Updated: 13 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

டான்ஸ் மாஸ்டரிடம் செல்போன், பணம் திருட்டு

கோயம்புத்தூர்

ஆர்.எஸ்.புரம்

கோவை குனியமுத்தூர் நரசிம்மபுரத்தை சேர்ந்தவர் வினோத் (வயது 35). டான்ஸ் மாஸ்டர். இவர் நேற்று முன்தினம் ஆர்.எஸ்.புரம் லோகமான்யா தெருவில் உள்ள நடன பள்ளியில் தனது பேக்கை வைத்து விட்டு அருகே உள்ள டீக்கடைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து அவர் திரும்பி வந்து பார்த்தபோது அவரது பேக்கை காணவில்லை.

அதில் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வினோத் அக்கம்பக்கத்தில் தேடினார். அப்போது வாலிபர் ஒருவர் அவரது பேக்குடன் தப்பி செல்ல முயன்றார். அந்த வாலிபரை மடக்கி பிடித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் வேடப்பட்டி நாகராஜபுரத்தை சேர்ந்த பெயிண்டர் முத்துக்குமார் (36) என்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.


Next Story