செவிலியர் உள்பட 3 பேரிடம் செல்போன் பறிப்பு
பொள்ளாச்சி பகுதியில் செவிலியர் உள்பட 3 பேரிடம் செல்போனை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பகுதியில் செவிலியர் உள்பட 3 பேரிடம் செல்போனை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன் பறிப்பு
பொள்ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (வயது 31). இவர் மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் வரவேற்பாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் எல்.ஐ.சி. காலனி பகுதியில் ரோட்டில் செல்போனில் பேசிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் அவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விசாரணை
பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் திவ்யா (வயது 25). இவர் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வெங்கடேசா காலனியில் உள்ள அய்யப்பன் கோவில் பகுதியில் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் நகர கிழக்கு போலீஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று வள்ளியம்மாள் லே-அவுட்டை சேர்ந்த மோகனா என்பவர் தெப்பக்குளம் வீதியில் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அவரிமும் மர்ம நபர்கள் கைவரிசையை காட்டி செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கேமராக்கள் பதிவை கொண்டு போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.