கருங்கல் அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கக் கூடாது;ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., கலெக்டரிடம் மனு


கருங்கல் அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கக் கூடாது;ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., கலெக்டரிடம் மனு
x

கருங்கல் அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கக் கூடாது என ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

கருங்கல் அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கக் கூடாது என ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கலெக்டரிடம் மனு கொடுத்தார்

மனு

கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் தலைமையில் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் லெனின் குமார், திப்பிறமலை பஞ்சாயத்து கவுன்சிலர் தபசிமணி மற்றும் கோட்டைவிளை ஊர் மக்கள் ஞான சிவமணி, டேவிட் ஆகியோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு கலெக்டர் அரவிந்த்தை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கருங்கல் அருகே உள்ள பாலூர் கோட்டைவிளை பகுதியில் ரேஷன் கடை, கோவில்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் ஏராளமாக உள்ளன. இங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மக்களின் நலன் கருதி குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கக் கூடாது. வேறு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story