வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செல்போன் பயிற்சி


வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செல்போன் பயிற்சி
x

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செல்போன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கீழப்பழூரில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் ஆண்களுக்கான செல்போன் சர்வீஸ் பயிற்சி, இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் பயிற்சி, எலக்ட்ரிக்கல்-மோட்டார் ரீவைண்டிங் பயிற்சிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எவ்வித கட்டணமும் இன்றி 100 சதவீதம் செய்முறை பயிற்சி, சீருடை, 3 வேளையும் உணவு, தேநீர், விடுதியில் தங்கி படிக்கும் வசதி, யோகா பயிற்சி மற்றும் பயிற்சி சான்றிதழ் உள்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். திறன்வாய்ந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சியளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்ததும் தொழில் தொடங்குவதற்கும் வங்கி கடன் பெற தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும். பயிற்சியில் சேர நாளை (திங்கட்கிழமை) நேர்காணல் நடத்தப்படும். 7-ந்தேதி பயிற்சி தொடங்கும். 18 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். எழுத, படிக்க தெரிந்தால் போதும். ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டு நகல், மாற்று சான்றிதழ் நகல், 100 நாள் வேலை அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-3 கொண்டு வர வேண்டும். இப்பயிற்சிகளுக்கு முன்பதிவுகள் வரவேற்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 9944850442, 7539960190 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம், என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story