கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் செல்போன் பயன்படுத்த தடை
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவும் அனுமதியில்லை என கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவும் அனுமதியில்லை என கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
நூலகத்தில் செல்போன் தடைக்கான அறிவிப்புகள் நூலகத்தில் ஆங்காங்கே நோட்டீஸ்களாக ஒட்டப்பட்டுள்ளது. தின்பண்டங்கள், குளிர்பானம் மற்றும் தண்ணீர் பாட்டில்களுக்கும் அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நூலகத்தில் குழந்தைகள் பிரிவில் 14 வயதுக்கு உட்பட்டோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story