மேலூர் அருகே மீன்பிடி திருவிழாவில் செல்போன்கள் திருட்டு


மேலூர் அருகே  மீன்பிடி திருவிழாவில் செல்போன்கள் திருட்டு
x

மேலூர் அருகே மீன்பிடி திருவிழாவில் செல்போன்கள் திருட்டுபோனது .

மதுரை

மேலூர்

மேலூர் அருகே திருவாதவூர் மற்றும் டி.கோவில்பட்டி ஆகிய ஊர்களில் மீன்பிடி திருவிழாக்கள் நடைபெற்றன. அப்போது மீன்களை இலவசமாக பிடிக்க நூற்றுக்கணக்கான பேர் மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அவ்வாறு வந்த பொதுமக்கள் தங்களுடைய செல்போன்கள் மற்றும் ரூபாய்க்களை மோட்டார் சைக்கிள்களின் பெட்டிகளில் பூட்டி வைத்துவிட்டு கண்மாயில் மீன் பிடிக்க சென்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம கும்பல் ஒன்று மோட்டார் சைக்கிள்களில் பெட்டியின் பூட்டுக்களை உடைத்து செல்போன்கள் மற்றும் ரூபாய்களையும் திருடி சென்று விட்டனர். இந்த திருட்டு சம்பவங்களில் 20-க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த திருட்டு சம்பவம் குறித்து யாரும் போலீசில் புகார் அளிக்க முன்வரவில்லை. மீன்பிடி திருவிழாக்களில் திருட்டு கும்பல் கைவரிசையை காட்டி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story