கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருட்டு


கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருட்டு
x

கடையின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் செல்போன்களை திருடி சென்றனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகரப்பகுதிக்குட்பட்ட வடக்கு ராஜ வீதி, பிருந்தாவனம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 3 செல்போன் கடைகளின் உரிமையாளர்கள் நேற்று காலை தங்களது கடையை திறக்க சென்றனர். அப்போது கடையின் ஷட்டர் கதவின் பூட்டை உடைக்க மர்ம ஆசாமி முயற்சி செய்திருந்தது தெரியவந்தது. இதற்கிடையில் பிருந்தாவனம் பகுதியில் நிஜாம் காலனியை சேர்ந்த அசாருதீன் என்பவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் திருட்டு போயிருந்தது. அந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்ட போது மா்ம ஆசாமி ஒருவர் கடையின் உள்ளே புகுந்து செல்போன்கள் மற்றும் செல்போன் உதிரி பாகங்களை திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த நபர் தான் மற்ற 3 கடைகளிலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என தெரியவந்தது. இது தொடர்பாக டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story