வணிக வளாக மேற்கூரையில் இருந்து பெயர்ந்து விழும் சிமெண்டு பூச்சு


வணிக வளாக மேற்கூரையில் இருந்து பெயர்ந்து விழும் சிமெண்டு பூச்சு
x
தினத்தந்தி 16 Dec 2022 6:45 PM GMT (Updated: 16 Dec 2022 6:45 PM GMT)

வணிக வளாக மேற்கூரையில் இருந்து பெயர்ந்து விழும் சிமெண்டு பூச்சு

நீலகிரி

ஊட்டி

சுற்றுலா நகரமான ஊட்டியின் நுழைவு வாயிலாக உள்ள சேரிங்கிராஸ் பகுதியில் பாரதியார் வணிக வளாகம் உள்ளது. இதன் மேற்கூரையில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து, கீழே உள்ள நடைபாதையில் கொஞ்சம், கொஞ்சமாக விழுந்து வந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை இருந்தது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துக்கு புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உத்தரவின்பேரில் நேற்று பெயர்ந்து விழும் நிலையில் இருந்த சிமெண்டு பூச்சு அலுவலர்களால் அகற்றப்பட்டது. ேமலும் நடைபாதையில் கிடந்த கட்டிட கழிவுகளும் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் நிம்மதி அடைந்தனர். எனினும் மீண்டும் பெயர்ந்து விழாத வகையில் வணிக வளாக மேற்கூரை பகுதியை சீரமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story