சிமெண்டு சாலை


சிமெண்டு சாலை
x

திருக்கடையூரில் குண்டும், குழியுமான சிமெண்டு சாலை சீரமைக்க வேண்டும்

மயிலாடுதுறை

திருக்கடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு வடம் போக்கி தெருவில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை சேதமடைந்து ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலை வழியாக செல்லும் விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குண்டும், குழியுமான வடக்கு வடம் போக்கி தெரு செல்லும் சிமெண்டு சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story