சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள்


சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள்
x

திருவண்ணாமலையில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியை சுற்றி சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகி்றது. இந்த பணியை கலெக்டர் முருகேஷ் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், மாட வீதியில் பே கோபுத் தெரு சந்திப்பு பகுதியில் இருந்து காந்தி சிலை வரை 1000 மீட்டர் அளவில் நவீன எந்திரங்களை கொண்டு புதிதாக சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியினை போர்கால அடிப்படையில் மேற்கொண்டு இந்த மாத இறுதிக்குள் நிறைவு செய்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

ஆய்வின் போது நெடுஞ்சாலை துறை திருவண்ணாமலை கோட்டப் பொறியாளர் ராஜ்குமார், மின்சார துறை உதவி செயற்பொறியாளர் ராஜமாணிக்கம், நகராட்சி உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story