அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா
அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவில் பேச்சு, பாட்டு, அழகு கையெழுத்து, தமிழ்-ஆங்கிலம் வாசித்தல், கோலம், திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற போட்டிகள் மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. பின்னர் முதன் முறையாக டிஜிட்டல் திரை பயன்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. முன்னதாக தலைமை ஆசிரியர் மகரஜோதி கணேசன் வரவேற்றார். ஆசிரியை மகேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். எண்ணும் எழுத்தும் கண்காட்சியை வட்டார கல்வி அலுவலர் பிரான்சிஸ் சார்லஸ் திறந்து வைத்தார். இதில் சுல்தான்பேட்டை ஒன்றிய தலைமை ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.