பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழா: மாரத்தான் போட்டி


பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழா: மாரத்தான் போட்டி
x

தமிழக அரசு பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இருந்து மாரத்தான் போட்டி நடைபெற்றது.

மதுரை


தமிழக அரசு பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இருந்து மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை கலெக்டர் அனிஷ்சேகர், மேயர் இந்திராணி, மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங் காலோன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மாரத்தான் போட்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தொடங்கி தாமரைத்தொட்டி வழியாக பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் அர்ஜுன் குமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் தல்லாகுளம் முருகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பொது சுகாதாரத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.மேலும் இந்த போட்டியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story