தா.பழூரில் சுகாதார திட்டங்கள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு


தா.பழூரில் சுகாதார திட்டங்கள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு
x

தா.பழூரில் சுகாதார திட்டங்கள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்தப்படும் சுகாதார திட்டங்கள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தா.பழூர், சிந்தாமணி, கோடாலிகருப்பூர், நடுவலூர், கோவிந்தபுத்தூர் ஆகிய 5 கிராம ஊராட்சிகளில் மத்திய அரசின் கிராம சுகாதார இயக்கம் சார்பில் செயல்பட்டு வரும் சுகாதார திட்டங்களான தனிநபர் இல்ல கழிவறை திட்டம், பள்ளி கழிவறை திட்டம், அங்கன்வாடி கழிவறை மற்றும் இதர அரசு அலுவலகங்களில் உள்ள கழிவறைகள் உள்ளிட்ட சுகாதார நிலை குறித்து மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். முடிவில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் சுகாதார திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுகாதார திட்டங்கள் குறித்த பதிவேடுகள் தணிக்கை செய்யப்பட்டன. தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுகாதார திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக அக்குழுவினர் தெரிவித்தனர்.


Next Story