மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

மலைக்கோட்டை:

திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று மாலை 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம், கோரிக்கை முழக்க வாயிற்கூட்டம், வங்கி வளாகத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் துரை தலைமை தாங்கினார். இதில் பொதுச் செயலாளர் ரகுராமன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து, அரசு சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற இருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். முடிவில் பொருளாளர் ராஜப்பா நன்றி கூறினார்.


Next Story