அனுமதியின்றி இயங்கிய கூட்டுறவு சங்கத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை


அனுமதியின்றி இயங்கிய கூட்டுறவு சங்கத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை
x

அனுமதியின்றி இயங்கிய கூட்டுறவு சங்கத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

பெரம்பலூர்

போலியாக இயங்கும்...

பெரம்பலூர், மதுரை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, நெல்லை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி போலியாக இயங்கும் வங்கிகள்-சொசைட்டிகளின் செயல்பாடுகளை முடக்குமாறு ரிசர்வ் வங்கி அறிக்கை அளித்திருந்தது.

அதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி போலியான வங்கிகளாக இயங்கி வந்த சங்கங்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக 45-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சுமார் ரூ.56 லட்சம் நிதி முடக்கப்பட்டுள்ளது.

சோதனை

அந்த வகையில் பெரம்பலூரில் துறைமங்கலம் நான்கு ரோடு அருகே செல்வா நகரில் ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் இயங்கி வந்தது. இந்த அலுவலகத்தில் கோர்ட்டு உத்திரவின்படி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜன், ஏட்டு செந்தில்குமார் அடங்கிய மத்திய குற்றப்பிரிவு போலீஸ் குழுவினர் சோதனை நடத்தினர்.

பெரம்பலூர் போலீசாரின் பாதுகாப்பு உதவியுடன் நேற்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த சோதனை நடந்தது. அப்போது கணினி வன்பொருள் (ஹார்டு டிஸ்க்) மற்றும் பணிபரிவர்த்தனை செய்யப்பட்ட ஆவணங்களை கைப்பற்றி, சென்னைக்கு எடுத்து சென்றனர். இது தொடர்பாக பெரம்பலூரில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story