வேளாண் காடுகள் வளர்ப்பில் மத்திய அரசு ஆர்வம்


வேளாண் காடுகள் வளர்ப்பில் மத்திய அரசு ஆர்வம்
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் காடுகள் வளர்ப்பில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருவதாக மத்திய மந்திரி பூபேந்தர யாதவ் கூறினார்.

கோயம்புத்தூர்

கோவை

வேளாண் காடுகள் வளர்ப்பில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருவதாக மத்திய மந்திரி பூபேந்தர யாதவ் கூறினார்.

ஆய்வு கூட்டம்

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் (ஐ.எப்.ஜி.டி.பி.) உள்ளது. இதன் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நிறுவன அரங்கில் நடைபெற்றது. இதற்கு நிறுவன இயக்குனர் குன்னி கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

இதில் மத்திய சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வன இணை மந்திரி பூபேந்தர யாதவ் கலந்து கொண்டார். கூட்டத்தில் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இந்த நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. மேலும் மத்திய அரசின் நிதி மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அதன் பலன்கள், தேவையான கட்டமைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

வேளாண் காடுகள்

இதையடுத்து மத்திய மந்திரி பூபேந்தரயாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் பல்வேறு ஆராய்ச்சிகளை திறம்பட மேற் கொண்டு வருகிறது. மத்திய அரசு தற்போது வேளாண் காடுகள் வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. பிரதமர் மோடி வேளாண் காடுகளை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

மூங்கில் வளர்ப்பை பொதுமக்களிடம் ஊக்குவித்து வருகிறோம். உத்ரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் பேரழிவுகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மத்திய மந்திரி பூபேந்தர யாதவ் ஐ.எப்.ஜி.டி.பி.யின் தாவர ஆராய்ச்சி மையம், திசு வளர்ப்பு ஆய்வகம், மூலக்கூறு மரபியல் ஆய்வகம், மரபணு மாற்ற ஆய்வகம், பழங்குடியினர் மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story