வர்த்தக முறைகேடு தொடர்பாக கல்வித் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை


வர்த்தக முறைகேடு தொடர்பாக கல்வித் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
x

Image Courtesy : @ians_india Twitter

முறைகேடான வர்த்தக செயல்பாடுகளில் ஈடுபடும் கல்வித் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் ரோகித் குமார் சிங், இந்திய இணையதளம் மற்றும் செல்போன் சங்கத்தின் (ஐஏஎம்ஏஐ ) கீழ் இயங்கும், சுய ஒழுங்குமுறை அமைப்பான இந்தியா எட்-டெக் கூட்டமைப்புடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பல்வேறு கல்வித் தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்றன.

அப்போது பேசிய ரோகித் குமார் சிங், கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள் சுய ஒழுங்குமுறைகளைக் கடைபிடித்து, முறைகேடான வர்த்தக செயல்பாடுகளை தடுக்காவிட்டால், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அரசே கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டியிருக்கும் என்று கூறினார்.

சில விளம்பரங்கள் தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி இல்லை என்றும் அத்தகைய விளம்பரங்களில் நுகர்வோர் நலனை பாதுகாக்கும் வகையில் தடுப்பு முறைகளை கடைபிடிப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story