மின்ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
நாகையில் மின்ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
நாகை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். திட்ட செயலாளர் கலைச்செல்வன், இணை செயலாளர் சிவராஜன், துணைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தங்கமணி, கூட்ட செயலாளர்கள் மணிமேகலன், குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் நிர்வாகி அமுல்ராஜ் நன்றி கூறினார். ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக்கூலி ரூ.380 மின்வாரியமே நேரடியாக வழங்க வேண்டும். கேங் மேன்களின் பயிற்சி காலம் குறைத்து காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும்.
ஜனவரி 1-ந்தேதி மாநில அரசு ஊழியர்களுக்கு அளித்த 3 சதவீதம் பயணப்படியை வழங்க வேண்டும். ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் உள்ளிட்ட பட்டம் பெற்று மின்வாரியத்தில் உள்ள 56 ஆயிரம் காலி பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் உள்ளவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.