மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் ஒப்பந்தம்
புரிந்துணர்வு ஒப்பந்தமும் பாதுகாப்பு பணியில் நவீன தொழில்நுட்ப திட்டங்கள் கையாளுதல் பற்றிய ஒப்பந்தம் என 2 ஒப்பந்தங்களில் கையெழுத்து போடும் நிகழ்ச்சி எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் ஆண்டு தோறும் தீவிரவாதம், கலவரத்தில் உயிரிழக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களின் 3 வாரிசுகளுக்கு பி.டெக் என்ஜினீயரிங்பட்டப்படிப்பில் இலவச அட்மிஷன் வழங்குகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் பாதுகாப்பு பணியில் நவீன தொழில்நுட்ப திட்டங்கள் கையாளுதல் பற்றிய ஒப்பந்தம் என 2 ஒப்பந்தங்களில் கையெழுத்து போடும் நிகழ்ச்சி எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இதற்கு எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் முத்தமிழ்ச்செல்வன், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களின் குடும்ப நல சங்கத்தின் மண்டல தலைவர் ஜெயசீலி தினகரன், மத்திய ரிசர்வ் போலீஸ் படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராஜேஷ் குமார் ஆகியோர் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு முதல் ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை டைரக்டர் ஜெனரல் டாக்டர் எஸ்.எல். தவுசன், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களின் குடும்ப நல சங்கத்தின் தலைவர் அஜிதா தவுசன், எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பதிவாளர் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஆவடி) எம்.தினகரன், எஸ்.ஆர்.எம். என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி டீன் முனைவர் டி. வி.கோபாலன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் எஸ்.ஆர்.எம். பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், என்ஜினீயரிங் மற்றும் பாதுகாப்பு கல்வி மாணவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம்களுக்கு சென்று அதன் செயல்பாடுளை அறிந்துகொள்ளவும், அவர்களோடு இணைந்து பாதுகாப்பு திட்டங்கள் உருவாக்கவும் உள்ளனர்.