தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களுக்கு தி.மு.க.வின் முத்திரை குத்தப்படுகிறது"


தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களுக்கு தி.மு.க.வின் முத்திரை குத்தப்படுகிறது
x

தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களுக்கு தி.மு.க.வின் முத்திரை குத்தப்படுகிறது”

திருப்பூர்

திருப்பூர்

தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களுக்கு தி.மு.க.வின் முத்திரை குத்தப்படுவதாக பா.ஜ.க மேலிட பார்வையாளர் சுதாகர் ரெட்டி கூறினார்.

மார்க்கெட்டில் பிரசாரம்

பா.ஜனதா கட்சியின் தமிழக மேலிட பார்வையாளர் சுதாகர் ரெட்டி திருப்பூர் சந்தைப்பேட்டை பகுதியில் மத்திய பா.ஜ.க. அரசின் சாதனைகளை விளக்கி பிரசாரம் செய்தார். வியாபாரிகளிடம் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கி கூறியதுடன் துண்டுபிரசுரங்கள், சாதனை விளக்க புத்தகங்கள் அளித்தார். மார்க்கெட்டில் பணம் கொடுத்து முருங்கைக்காய் கட்டு வாங்கினார்.

பின்னர் சுதாகர் ரெட்டி கூறியதாவது:-

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான கைது சம்பவம் பா.ஜனதாவின் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல. சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கையின்படி அமலாக்கத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஆனால் தமிழகத்தில் மத்திய அரசு மீது பொய் பிரசாரம் பரப்பப்பட்டு வருகிறது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வளர்ச்சிப்பணிகள் நடக்கிறது. ஆனால் மத்திய அரசின் திட்டங்களில் தி.மு.க.வின் முத்திரை குத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில், அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடி படம் வைக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் முதல்-அமைச்சர் படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

25 தொகுதிகளில் வெற்றி

தமிழக மக்கள் இதை நன்கு கவனித்து வருகிறார்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க.வுக்கு தக்க பாடம் புகட்டி, தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற செய்வார்கள். தமிழகத்தில் 25 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும். இந்திய அளவில் பெரும்பான்மையுடன் பா.ஜனதா ஆட்சி அமையும். பா.ஜனதா ஊழல் இல்லாத ஆட்சியை நடத்தி வருகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஜெயில் டூ பெயில், பெயில் டூ ஜெயில் என்ற நிலை இருந்தது. ப.சிதம்பரம், கனிமொழி, ஆ.ராசா போன்றோர் இதற்கு உதாரணம்.

பிரதமர் மோடியின் வளர்ச்சியை தி.மு.க., காங்கிரஸ் கட்சியினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உலக தலைவர்கள் மதிக்கும் தலைவராக பிரதமர் மோடி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story