77 பதக்கங்களை வென்ற மத்திய மண்டல போலீசார் ஐ.ஜி. நேரில் அழைத்து பாராட்டு


77 பதக்கங்களை வென்ற மத்திய மண்டல போலீசார் ஐ.ஜி. நேரில் அழைத்து பாராட்டு
x

77 பதக்கங்களை வென்ற மத்திய மண்டல போலீசாரை ஐ.ஜி. நேரில் அழைத்து பாராட்டினார்.

திருச்சி

காவல்துறை மண்டலங்களுக்கு இடையே 63-வது ஜூடோகிளாஸ்டர் விளையாட்டு போட்டிகள் சென்னையில் நடந்தது. போட்டிகளில் 9 மண்டலங்களில் இருந்து 963 போலீசார் கலந்து கொண்டனர். இதில் ஜூடோ, டேக்வாண்டோ, பென்சிங், கராத்தே, ஊசூ, ஜிம்னாஸ்டிக் போன்ற போட்டிகள் நடந்தன. போட்டிகளில் மத்திய மண்டலத்தில் இருந்து 81 போலீசார் கலந்து கொண்டனர். இவர்கள், 19 தங்கம், 20 வெள்ளி, 38 வெண்கலம் என்று மொத்தம் 77 பதக்கங்களை தட்டிவந்தனர். வெற்றி பெற்ற போலீசாரை மத்திய மண்டல ஐ.ஜி.கார்த்திகேயன் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அரியானா மாநிலத்தில் நடைபெற்ற போலீசாருக்கான பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்ட மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட மயிலாடுதுறை மாவட்ட ஆயுதப்படை பெண் போலீஸ் நிறைமதி வெண்கலப்பதக்கம் வென்றார். அவருக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் வெகுமதி அறிவித்துள்ளது. அவரையும் ஐ.ஜி. நேரில் அழைத்து பாராட்டினாா்.


Next Story