செராமிக் கம்பெனி உரிமையாளர் தற்கொலை


செராமிக் கம்பெனி உரிமையாளர் தற்கொலை
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் செராமிக் கம்பெனி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

விருத்தாசலம்

விருத்தாசலம் சக்தி நகரை சேர்ந்தவர் வேணுகோபால் மகன் கதிர்வேல் (வயது 35). இவர் எம்.ஆர்.கே. நகரில் செராமிக் கம்பெனி நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லாமல் இருந்து வந்தது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதிர்வேல், விஷத்தை குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி கதிர்வேல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story