புரவி எடுப்பு விழா
புரவி எடுப்பு விழா நடந்தது
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.மாம்பட்டி கிராமத்தார்கள் ஒன்றிணைந்து ஒவ்வொரு ஆண்டும் கரந்தமலை அய்யனார் மற்றும் குண்டமடை அய்யனார், செங்குளத்து அய்யனார் மோசலி அய்யனார் கோவிலுக்கு புரவி செய்து புரவி எடுப்பு விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. முன்னதாக புரவி செய்ய குயவர்களிடம் கடந்த 2 மாதத்திற்கு முன்பு எஸ்.மாம்பட்டி கிராமத்தார்கள் சார்பில் பிடிமண் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புரவிகள் புரவிப் பொட்டலில் அரண்மனை யானை, அரண்மனைப் புரவி மற்றும் நேர்த்திக்கடன் புரவிகள் 56 என மொத்தம் 58 புரவிகள் தயாரானது. இந்நிலையில் கடந்த மார்ச் 31-ந்தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. கடந்த 7-ந்தேதி எஸ்.மாம்பட்டி கிராமத்தார்கள் ஒன்றிணைந்து புரவி பொட்டலில் தயாராக இருந்த புரவிகளுக்கு சிறப்பு பூஜை செய்து மந்தைக்கு கொண்டு செல்லும் விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை 6 மணி அளவில் புரவிகள் ஊர்வலமாக கரந்தமலை அய்யனார், குண்டமடை அய்யனார், செங்குளத்து அய்யனார், மோசலி அய்யனார் ஆகிய கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு நேர்த்திக்கடன் நிறைவு செய்யப்பட்டது.