சுத்தானந்த பாரதி பிறந்த நாள் விழா
சுத்தானந்த பாரதி பிறந்த நாள் விழா நடந்தது
சிவகங்கை
சிவகங்கை தமிழ்ச்சங்கத்தின் சார்பாக கவியோகி சுத்தானந்த பாரதியின் 126-வது பிறந்த நாள் விழா சிவகங்கையில் நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் முன்னிலை வகித்தார். தமிழ் சங்கத்தின் தலைவர் தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன் வரவேற்று பேசினார்.
விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கவியோகி சுத்தானந்த பாரதியார் பெயரில் இயல் விருதினை எழுத்தாளர் குருசாமி மயில்வாகனனுக்கும், இசை விருதினை சுவாதிக்கும், நாடக விருதினை திரைப்பட இயக்குனர் சுந்தரபாண்டியனுக்கும் வழங்கி பேசினார்.
சிவகங்கை நகர மன்ற தலைவர் துரை ஆனந்த், நகரமன்ற துணைத் தலைவர் கார்கண்ணன், சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியின் நிறுவனர் சேது குமணன், பகிரத நாச்சியப்பன், சிவகங்கை தமிழ் சங்கத்தின் நிறுவனர் ஜவகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினா். முடிவில் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.